புறநானூறு 242 : குடவாயிற் கீரத்தனார்
வள்ளல் சாத்தன் மறைவை ஒட்டி மக்கள் சோகத்தில் இருப்பதைக் கூறுகிறார் புலவர் ' குடவாயிற் கீரத்தனார் '
முல்லைப்பூவே ... குழந்தைகள் சூடமாட்டார்களே. முதுகு வளைந்த பெரியவர்களும் பறிக்கமாட்டார்கள். தான் இசைக்கும் யாழினைக் கொண்டு பிடித்திழுத்து இசைபாணனும் சூடிக்கொள்ள மாட்டான். தமிழ் கொண்டு பாடும் பாடினியும் பறித்து அணியமாட்டாள். ஆண்மையோடு படைகளை வென்ற வலிய வேல் போன்ற சாத்தன் மாண்ட பின் பூத்தாயே ஒல்லையூர் நாட்டிலே ....
புறநானூறு 242
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?
Comments