குறுந்தொகை 399 : பரணர்
ஊருக்கு நீர்வழங்கும் குளத்தின் மேற்பரப்பில் போர்த்தியிருக்கும் பாசி போன்றது 'பசலை' என்னும் இக்காதல் நோய். காதலன் தொடும்பொழுதெல்லாம் நீங்கி, அவர் என்னை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் மீண்டும் பரவுகின்றதே ....
குறுந்தொகை 399
ஊருண் கேணி யுண்டுஉறை தொக்கப்
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே ..
Comments