Skip to main content
குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்
- "
போர்வீரன் காலில் *கழலும் , தோளில் *தொடியணிந்த இப்பெண்ணின் மெல்லிய
காலில் சிலம்பும் இருக்கிறது. இந்த நல்லவர்கள் யாரோ ? ஒன்றாக வருவதால்
ஒருவருக்கொருவர் அன்புடையவர்கள் என்று மட்டும் தெரிகிறது. ஆரியரின் நூல்
போன்ற கயிற்றில் தொங்கும் பறையில் காற்று நுழைந்து சுழற்றியடித்ததைப்
போலக் கலங்கிப்போயுள்ளனர் இருவரும் . வாகை மரத்தின் உச்சியிலுள்ள வெண்ணிற
விதையுடைய *நெற்றை உடைக்கின்ற வெயில் புழங்கும் பாலை நிலம் நோக்கிச்
செல்கின்றனரே .... " என்று கையறு நிலையில் செல்லும் இணையரைப் பார்த்து
வருந்திய யாரோ சொல்லியது ...
-
-
- குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்
- வில்லோன் காலன கழலே தொடியோள்
- மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
- யார்கொ லளியர் தாமே யாரியர்
- கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
- வாகை வெண்ணெற் றொலிக்கும்
- வேய்பயி லழுவ முன்னி யோரே.
-
-
-
- கழல் - [ ஆண்கள் அணியும் சிலம்பு / மற்றும் செருப்பு]
- தொடி - [ பெண்கள் தோளில் அணியும் அணிகலன் ]
- நெற்று - [ மேல்தோல் / விதையுடைய காய் எ.க. நிலக்கடலை நெற்று ]
- அழுவம் - [ பரந்த நிலம் / மலை - பாலை ]
- தொலி - தோலை உரித்தல் / ஒலி - ஓசை
-
-
-
-
Comments